Survey of Women Welfare Associations: மதுவால் கணவனை இழந்து தவிக்கும் பெண்கள்.. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கத்தினர் ஆய்வு..!

தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க காரணம் மதுபானமே; தமிழகத்தில் 38.5 லட்சம் கைம்பெண்கள் உள்ளனர்.

Survey of Women (Photo Credit: Pixabay)

ஜூன் 24, மதுரை (Madurai News): கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் சார்பில், மதுரையில் ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட நிலை என்ன என்பது குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு செய்தனர். இது குறித்து ‘லாஸ்’ LAAS மையம் நிர்வாகிகள் ராஜகுமாரி, ஆலாய்சஸ் இருதயம், பால் மைக்கேல்ராஜ், கைம்பெண்கள் ஆதரவற்ற நலச்சங்கம் தலைவர் அன்புச்செல்வி, துணைச் செயலாளர் சுதா, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் கஸ்தூரி, ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் விதவைகளின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களது எண்ணிக்கையில் 7.3 சதவீதம் ஆகும்.

தமிழகத்தை பொறுத்தவரை, 2011-ம் ஆண்டு அடிப்படையில் வாழும் விதவைப் பெண்களின எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது. இது தமிழகத்தில் வாழும் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம். அப்படியானால், இப்புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகம். தற்போது தமிழகத்தில் 40 லட்சம் விதவைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழத்தில் அரியலூர், சென்னை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு 30 அல்லது 31 கைம்பெண்கள் வீதம் 495 விதவைப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. Legend Saravanan's Second Film: கருடன் பட இயக்குனருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்.. வெளியான லெஜண்ட் சரவணனின் புதிய மாஸ் லுக்..!

அவர்கள் தங்கள் கணவர்கள் இறப்பிற்கு மது போதை, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், விபத்து, தற்கொலை, கொரோனா போன்ற 9 காரணங்களை கூறுகின்றனர். இதில், மதுபோதையில்தான் அதிகளவு கணவர்கள் இறந்துள்ளதாக அந்தப் பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. விதவைப் பெண்கள் மத்தியில் கடன் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏறக்குறைய 85 சதவீதம் விதவைப் பெண்கள் கடனாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து குறைந்த வட்டி விகத்தத்தில் கடன் பெற்றிருக்கின்றனர். ஆனால் 50 சதவீதம் பேர் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களிடமிருந்து மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருக்கின்றனர். விதவைகள் தங்களுக்கான வாழ்வாதார உரிமைகளைத் தேடிப் பெறுவது பெரும் சவாலாகவே உள்ளது.

கணக்கெடுப்பில் பங்கேற்ற விதவைகளில் 38.6 சதவீதம் பேர் மட்டுமே விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான ஆவணத்தை வைத்திருக்கின்றார்கள். விதவைகள் இத்திட்டத்தின கீழ் பயனடைவதைத் தடுக்கின்ற காரணிகள் லஞ்சம் மற்றும் விதவைகள் குறித்தான பாகுபாட்டுக் கண்ணோட்டம் என்று கூறுகின்றனர். தமிழக அரசு விதவைப் பெண்களுக்ககென தனிவாரியம் அமைத்து அவர்களது மேம்பாட்டிற்கு வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது. அம்முயற்சியினை வரவேற்பதோடு கீழ்கண்ட பரிந்துரைகளை தமிழக அரசுக்கு இந்த ஆய்வு முன் வைக்கின்றது. விதவைகளது சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளையும் மற்றும் சமத்துவம், வாழ்வாதாரம், வழிபாடு தொடர்பான உரிமைகளையும் உத்திரவாதப்படுத்திட வேண்டும். கணவனது இறப்பினைத் தொடர்ந்து நடத்தப்படும் சமூகக் கலாச்சாரச் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் தடை செய்யப்பட வேண்டும்” என்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement