Kamal Haasan: "ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகள்" - விஜயகாந்தை புகழ்ந்த நடிகர் கமல் ஹாசன்.!
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளை சுட்டிக்காட்டி கமல் ஹாசன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்.
ஆகஸ்ட் 25, சென்னை (Chennai): தமிழ் திரையுலகின் மறைந்த மூத்த நடிகர்களில் ஒருவராகவும், தமிழக மக்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த தலைவனாகவும், கேப்டன்கவும் இருந்தவர் விஜயகாந்த் (Vijayakant). திரையுலக தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட விஜயகாந்த், தீவிர அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாட்டின் முந்தைய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், 28 டிசம்பர் 2023 அன்று விண்ணுலகை சென்றடைந்தார். Unified Pension Scheme: ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
கமல் ஹாசன் நெகிழ்ச்சி ட்விட்:
25 ஆகஸ்ட் அன்று இவரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், இன்று பல இடங்களிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் சிறப்பிக்கப்பட்டது. பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் & மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்" என தெரிவித்துள்ளார்.