Unified Pension Scheme (Photo Credit: @narendramodi / @MIB_India X)

ஆகஸ்ட் 25, புதுடெல்லி (New Delhi): மத்திய அமைச்சரவை நேற்று (25 ஆகஸ்ட் 2024), ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு (Unified Pension Scheme UPS) ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. இதன்படி, ஏற்கனவே அமலில் இருக்கும் என்பிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதுகுறித்து விரிவாக இன்று காணலாம். ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள காரணத்தால், எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருகிறது. புதிய திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சமாக 25 ஆண்டுகள் பணியை நிறைவுசெய்தால், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, 12 மாதங்களில் பெட்ரா அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% தொகையை ஓய்வூதியமாக பெறலாம். Microsoft Edge Browser: எட்ஜ் ப்ரௌசர் பயன்படுத்துவோரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் அப்டேட் இதோ.!

குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி:

மத்திய அரசுப்பணியாளர்கள் பணியின்போதே உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அவர்களின் குடும்பத்தினர் 60% ஓய்வூதிய பலனைப்பெற இயலும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர், ஓய்வக்கு பின்னர் மாதம் ரூ.10 ஆயிரம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்குவதை திட்டம் உறுதிசெய்கிறது. இதன் வாயிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு என்பது 18% என அதிகரிக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு வழங்குகின்றனர். அரசு 14% ஊழியர்களின் நலனை காக்க பங்கு வழங்குகிறது. இதன் வாயிலாக, அவர் ஓய்வுபெறும் சமயத்தில், ஊழியரின் மொத்த நிதித்தொகையில் 60% பெருந்தொகையாக வழங்கப்படும். எஞ்சிய தொகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும் அல்லது வழங்கப்படும்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தில், பணியாளர்கள் ரூ.1.50 இலட்சம் வரை சேமிப்பு வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவில் விலக்கு வழங்கப்படும். கூடுதலாக ரூ.50 ஆயிரம் வருட சேமிப்புக்கு 80 சிசிடி பிரிவில் வருமான வரிவிலக்கு வழங்கப்படும். ஓய்வுபெற்ற பணியாளர்கள் தாங்கள் சேமித்த தொகையில் குறிப்பிட்ட அளவை எடுத்துக்கொள்ளலாம்.

ஓய்வூதியத்திட்டம் குறித்து அரசின் அறிவிப்பு: