Edappadi Palanisamy About Agri Budget: விவசாயிகளை ஏமாற்றும் வேளாண்துறை அறிவிப்புகள்; வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்.!
திமுகவின் வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியதை போல இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
மார்ச் 21, சட்டப்பேரவை (Legistive Assembly, Chennai): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் (Tamilnadu Budget Session) 2023-24 பட்ஜெட் தாக்கலுடன், மார்ச் 20ம் தேதியான நேற்று தொடங்கியது. இன்று வேளாண்துறை (TN Agri Budget 2023) அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் (M.R.K Panneer Selvam) ரூ.38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் முக்கியமானவை பின்வருமாறு., தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. ஏரிகள் மற்றும் ஆறுகளை தூர்வாரியதன் எதிரொலியாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்படும். Man Nose Cutted: கள்ளக்காதல் உறவில் இருந்தவரை அடித்து நொறுக்கி, மூக்கை அறுத்த சகோதரர்கள்.. தந்தையுடன் சேர்ந்து பகீர் செயல்.!
சாமை, கம்பு, கேழ்வரகு விளைவிக்கும் விவசாயிகளில் அதிக விளைச்சலை கொண்டவர்களுக்கு ரூ.5 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் நபருக்கு நம்மாழ்வார் விருதுடன், ரூ.5 இலட்சம் பரிசு வழங்கப்படும். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு மண்டலம்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை சேர்ந்து டன்னுக்கு கொள்முதல் விலை ரூ.2945 உயர்த்தப்படுகிறது. விவசாயிகளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயிர்க்கடன் வழங்குவதற்கு கூட்டுறவு மையங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, காவேரி படுகை சீரமைப்பு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லாத கடன் பெற ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. TN Budget 2023-24: தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு அறிவிப்பும் உள்ளே..!
இந்த நிலையில், பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இன்று விடியா திமுக அரசு வேளாண் பட்ஜெட் என தாக்கல் செய்தது விவசாயிகளை ஏமாற்றும் விஷயம் ஆகும். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடப்பதாக தெரியவில்லை.
வேளாண் மானிய கோரிக்கையில் இடம்பெற்றதுதான் இங்கும் உள்ளது. வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் இல்லை. பல துறைகளை உள்ளடக்கி வேளாண் பட்ஜெட் என கூறி 2 மணிநேரத்திற்கு மேலாக அமைச்சர் உரையாற்றினார். அவர் பேசியதில் வேளாண் பெருமக்களுக்கு முக்கியமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் இல்லை.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார். தற்போது வேளாண் அறிக்கைக்கு பின்னர் பழைய தொகையில் இருந்து ரூ.195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறுகிறார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை முழுவதும் வழங்கப்படும் என கூறினார்கள். அவை குறித்த அறிவிப்பு இல்லை. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என கூறினார்கள். இன்று நெல் ரகத்தை பிரித்து எவ்வித விலைஉயர்வும் இன்றி ரூ.100, ரூ.75 ஊக்கத்தொகை என சொல்கிறார்கள். England MP Bob Blackman: இந்திய தேசிய கொடி காலிஸ்தானிய ஆதரவாளர்கள் போராட்ட விவகாரம்; இங்கிலாந்து எம்.பி அதிரடி கருத்து.!
நெல்லை விளைவிப்பது அவ்வுளவு எளிமையானது இல்லை. இவர்களின் அறிவிப்பு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. விவசாயிகளை ஏமாற்றும் அரசாக திமுக இருக்கிறது.
பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு இழப்பீடு வழங்கியது அதிமுக தான். வறட்சி வந்த போதும் நாங்கள் (அதிமுக) தான் ரூ.2500 கோடி இழப்பீடு வழங்கினோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட போது, இழப்பீடாக ரூ.13500 மட்டுமே கொடுத்தார்கள்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டபோது, நான் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.20000 ஆயிரம் வழங்கினேன். இவர்கள் ரூ.13500 கொடுக்கிறார்கள். அவையிலும் முறையான கணக்கீடு இல்லை.
விவசாயிகள் செலுத்திய காப்பீட்டு முன்தொகை கூட கிடைக்கவில்லை. இப்படியான அவல நிலைதான் திமுக ஆட்சியில் உள்ளது. நெல்மணிகளை விரைந்து விற்பனை செய்ய முடியவில்லை. கொள்முதல் செய்யாமல் திறந்த வெளியில் விவசாயிகள் அடுக்கி வைத்து, பலஇலட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின.
விடியா திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் செய்யப்படுகிறார்கள். தைப்பொங்கலுக்கு நாங்கள் முழு கரும்பு வழங்கினோம். விடியா திமுக அரசு அதனை நிறுத்தியது. அமைச்சர் ஒருவர் அதனை விமர்சிக்கிறார்" என்று பேசினார்.