AIADMK Sellur K Raju Speech: நாம் யாரின் வாரிசு?.. கலகலப்பாக பேசி காட்டமான செல்லூர் ராஜு.. அவர்களை எதைக்கொண்டு அடிக்கலாம்? என கேள்வி.!
அப்பனுக்கு தப்பாமல் மகன் பிறந்துள்ளார் என்பதை உறுதி செய்வதை போல, மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி பல உழைப்பாளிகள் உள்ள இயக்கம் என திமுகவை கூறிவிட்டு, அவரே அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.
ஜனவரி 20, மதுரை: மதுரையில் (Madurai) நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு (Sellur K Raju) தொண்டர்களிடையே உரையாற்றுகையில்,"எம்.ஜி.ஆர் (MGR) மறைந்துவிட்டார் என கிராமத்தில் கூறினால், அவர்கள் எம்.ஜி.ஆரின் மறைவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர் திரைப்படத்தின் மூலம் இன்றளவம் மக்களிடையே வாழுகிறார். இன்று பலரும் திரைப்படங்களில் நடிக்கிறார்கள்.
நாம் யாருடைய வாரிசு?.. விஜயின் வாரிசு என கூறிவிடாதீர்கள்..நாம் புரட்சித்தலைவர் அம்மா (J.Jayalalithaa) - புரட்சித்தலைவர் அவர்களின் வாரிசு. உண்மையில் நாம் பெருமைப்பட வேண்டும். இப்படியான இயக்கத்தில் நாம் இருக்கிறோம். புரட்சி தலைவரும், புரட்சித்தலைவரும் நம்முடன் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். 137 திரைப்படங்களில் நடித்து, அப்படத்தில் தனது கொள்கைகளை கூறி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர் தான். Ghaziabad Man Split Roti: சூடான சுவையான எச்சில் சப்பாத்தி சுடச்சுட தயார்.. முதியவர் அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ.!
திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் (DMK President M.K.Stalin) தனியார் தொலைக்காட்சி பேட்டியெடுத்தபோது, எனது குடும்பத்தில் என்னை தவிர வேறு யாரும் திமுகவுக்கு தலைமை தயங்கமாட்டோம் என கூறினார். அதே வாய் உதயநிதியை (Udhayanidhi Stalin) அமைச்சராக்கியுள்ளது. உதயநிதியிடம் இளைஞரணி செயலாளர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்புகையில், அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்ததை போல பேசினார். இன்று அமைச்சராகி இருக்கிறார். அப்பன் எந்த வழியோ, மகன் அதே வழி.
திமுகவில் உழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என கூறி உதயநிதி அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். திமுக மக்களிடம் கூறியதெல்லாம் பொய். 500 வாக்குறுதிகள் கூறி ஒன்று, இரண்டை நிறைவேற்றி ஏமாற்றிவிட்டனர். மகளிருக்கு இலவச பேருந்துகள் என கூறிவிட்டு, அதிலும் ஏமாற்று வேலையை செய்தார்கள். அவர்களை எதைக்கொண்டு அடிக்க வேண்டும்?. நீங்கள் வரும்போது அவர்களிடம் கேளுங்கள். 25 பேருந்து, 40 பேருந்துக்கு ஒரு மகளிர் இலவச பேருந்து பயணிக்கிறது. மகளிருக்கு ரூ.1000 கொடுப்போம் என கூறிவிட்டு, அல்வா கொடுத்திருக்கிறார்கள்" என பேசினார்.