RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு - முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

தங்களின் மீது குற்றசாட்டை முன்வைக்க ஆதாரங்கள் வேண்டும், கொரோனா காலத்தில் தங்கசுரங்கமே மூடப்பட்டு இருந்தபோது கூட தாலிக்கு தங்கம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஆர்.பி உதயகுமார் பேசினார்.

File Image: AIADMK R.B Udhaya Kumar at Erode By Poll Election Campaign Visuals (Photo Credit: Twitter)

பிப்ரவரி 09, ஈரோடு: ஈரோடு கிழக்கு (Erode East) சட்டப்பேரவை இடைத்தேர்தலில் (Erode East By Poll) களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் (AIADMK Candidate) தென்னரசுவை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (R.B. Udhayakumar) வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர்களை சந்திக்கையில், "செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிமுக வேட்பாளருக்கு நல்ல வரவேற்பை தருகின்றனர். திராவிட முன்னேற்ற கழக மக்கள் (DMK) விரோத அரசு, 525 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் மக்கள் கோபத்துடன் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

மக்களுக்கு தேவையான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, கல்விக்கடன் இரத்து, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு (Petrol Diesel), கேஸ் மானியம், நீட் தேர்வு (NEET Exam) இரத்து போன்ற பலவற்றை அவர்கள் செய்துவிட்டார்களா?. மக்கள் மன்றத்திலும், சட்டப்பேரவையிலும் அவர்களுக்கு இருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி செய்யாததை செய்ததாக சொல்லி வருகிறார்கள். Cuddalore Family Killed: இளம்பெண், 2 கைக்குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த பயங்கரம்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!

திமுகவினர் என்றுமே அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை என்பதே எதார்த்தமான களநிலவரம். புதுமைப்பெண் திட்டம் பெண் கல்வியை (Women Education) ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், உயர்கல்வி திட்டம் போன்றவற்றை ரத்து செய்து மாதம் ரூ. 1000 மாணவிகளுக்கு வழங்குவதாக நாடகம் ஆடுகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் என்பது என்னைப்பொறுத்தவரையில் பழமைப்பெண் திட்டம் தான்.

கொரோனா (Corona) காலத்தில் தங்கசுரங்கம் (Gold) உலகம் முழுவதிலும் பூட்டப்பட்டது. அப்போது கூட 1 இலட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) தான். வாய்பேச்சாக குற்றசாட்டை முன்வைக்கலாம். ஆனால், அதற்கு ஆதாரங்கள் வேண்டும்" என்று பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 09, 2023 10:27 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).