TASMAC Shut For 3 Days: 'குடி'மகன்களே முதலில் ஓட்டு போடுங்கள்.. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.
ஏப்ரல் 09, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Mahindra XUV 3XO Bookings Open: சம்பவம் செய்ய காத்திருக்கும் மஹிந்திரா.. மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 புக்கிங் ஆரம்பம்..!
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17, 18, 19 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.