Srimathi Death Case Update: ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; சி.பி.சி.ஐ.டி-யிடம் கொடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.!
இதனால் விரைவில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மை தகவல் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 20, விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் (Chinnaselam, Kallakurichi), கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியின் விடுதியில் தங்கிருந்து படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி (வயது 17), கடந்த ஜூலை 13, 2023ல் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தனது மகளின் (Srimathi Death Case) மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
மாணவி இறந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் (CBCID Investigation) மேற்கொள்ளப்படுகிறது. விசாரணையை நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. இதற்கிடையில், ஸ்ரீமதி உபயோகம் செய்ததாக கூறப்படும் செல்போனை சி.பி.சி.ஐ.டி தரப்பினர் கேட்க, பெற்றோர் தரப்பில் அதனை கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனர். TTV Dhinakaran Latest Speech: இடைத்தேர்தலில் களமிறங்குகிறது அமமுக?.. ஆர்.கே நகர் சூட்சமதுடன் ட்விஸ்ட் வைத்த டிடிவி தினகரன்.!
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று விழுப்புரம் நீதிபதிகள் (Viluppuram Judges) அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஸ்ரீமதியின் பெற்றோர் செல்போனை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில், ஸ்ரீமதி பயன்படுத்தியதாக கூறப்படும் செல்போன் நீதிபதிகள் முன் ஒப்படைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நடுவர், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் செல்போனை கொடுக்க அறிவுறுத்தினார். முன்னதாக ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் செல்போனை நீதிமன்றத்திடம் கொடுப்பதாக வாதாடியபோது, அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு பின்னர், ஸ்ரீமதியின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொலைகாரர்களுக்கு உதவியாக இருக்கிறர்கள். நடக்கும் வழக்குக்கும் செல்போனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாப்பாவிடம் (ஸ்ரீமதி) தனிப்பட்ட செல்போன் என எதுவும் இல்லை. 20 நாட்கள் ஆன்லைன் வகுப்பு கலந்துகொண்ட செல்போனை கேட்கிறார்கள். IMEI நம்பர் தெரியாத செல்போனை கேட்கிறார்கள். யார்யாரோ செல்போனின் IMEI நம்பரை கொண்டு வந்து போன் கேட்கிறார்கள். Pushpa 2 The Rule: நாளை தொடங்குகிறது புஷ்பா படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு.. ரசிகர்களுக்கு கியூட் சர்பிரைஸ் வைத்த படக்குழு.! விபரம் உள்ளே.!
எதற்கெடுத்தாலும் சம்மன் என எங்களை வாட்டி வதைக்கிறார்கள். இந்த ஆர்வத்தை கொலையாளியிடம் காண்பித்து இருந்தால் குற்றவாளிகளை கண்டறிந்து இருக்கலாம். நாங்கள் கேட்கும் விளக்கத்தை கூறாமல், சம்மன் கொடுக்கிறார்கள். ஸ்ரீமதி விஷயத்தில் சின்னசேலம் காவல் துறையினர் முதல் சி.பி.சி.ஐ.டி வரை தவறான விசாரணையை மேற்கொள்கின்றனர். ஸ்ரீமதி விஷயத்தில் ஒருதலைபட்சமான விசாரணை நடந்து வருகிறது.
பாமர மக்கள் நீதி கேட்டு எங்குதான் ஓடுவது?. கொலைகாரனை யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செல்போனை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வந்துள்ளோம்" என தெரிவித்தார்.