Bomb Threat: ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களுக்கு விடுமுறை..!

தமிழ்நாட்டில் பல இடங்களில் தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

The Indian Public School (Photo Credit: @backiya28 X)

ஆகஸ்ட் 29, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையம் பகுதியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, தி இந்தியன் பப்ளிக் பள்ளி (The Indian Public School) நிர்வாகம் உடனே பள்ளிக்கு விடுமுறை அறிவித்து, வந்த மாணவர்களை பள்ளி வாகனம் மூலம் திருப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கள்ளிக்குடியில் உள்ள பள்ளியில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். Question Paper Leak: பி.எட் தேர்வுகள் வினாத்தாள் கசிவு?.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை.!

தொடர்ந்து சேலம் கோரிமேடு அருகே உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் மர்மநபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat) விடுக்கப்பட்டது. திருச்சி கள்ளக்குடியில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.