Tamil Nadu Teachers Education University (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 29, சென்னை (Chennai News): தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Teachers Education University) சார்பில், பி.எட் பயிலும் மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டு வந்தன. இன்று அவர்களுக்கு பருவத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே, நேற்று மாலைக்கு பின்னர் பி.எட் பருவத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தகவல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு சென்றடையவே, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. Tenkasi Accident: நாயை காப்பாற்ற எண்ணிய ஓட்டுநர்; கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 3 பேர் பரிதாப பலி., தென்காசியில் சோகம்.! 

தனியார் கல்லூரிக்கு விற்பனை?

பழைய வினாத்தாளுக்கு பதிலாக, புதிய வினாத்தாள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பி.எட் பருவத்தேர்வுகளுக்கான வினாத்தாள்களை வெளிமாநில மாணவர்களுக்காக, பல இலட்சங்கள் பணம் பெற்றுக்கொண்டு தனியார் கல்லூரிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் துறை ரீதியாக அல்லது வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.