IT Employee Arrested In Case Of Cannabis: பெண்கள் விடுதி அறையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் ஐ.டி. ஊழியர் உட்பட இருவர் கைது..!
ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அங்கு சென்ற காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள விடுதி அறையில் 1.3 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர். Landslide On The National Highway: கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு; தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு..!
இதுகுறித்து அந்த அறையில் வசித்து வந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் தான் கஞ்சாவை கொடுத்ததாக கூறியதை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சுரேஷ் என்பவர் கால் டாக்சி (Call Taxi Driver) ஓட்டி வந்தநிலையில், இதனை காரணமாக வைத்து, வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய கஞ்சாவை, உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, ஐ.டி. ஊழியர் ஷர்மிளா மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.