Layoffs (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 27, புதுடெல்லி (New Delhi): தொழில்நுட்ப நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கம், வேலை இழப்பு போன்ற பிரச்சனைகள் மிகப்பெரிய விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. பல்லாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய பணி நீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக புகார்களும் எழுந்துள்ளன. குறிப்பாக ஐடி சார்ந்த தொழில்நுட்ப பணிகளில் வேலை பார்ப்போர் வேலையை இழந்து பரிதவிப்பதாகவும், இந்த விஷயம் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 90,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

பணிநீக்க நடவடிக்கை (Lay Off's Controversy):

குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, இன்டெல், ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ் உட்பட பல நிறுவனங்களிலிருந்து பணி நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததன் வாயிலாக பலருக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. பணிநீக்கங்கள் கண்காணிப்பு வலைத்தளத்தின் அடிப்படையில் வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட மொத்த தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை 89,964 ஆகும். கடந்த 2024 ஆம் ஆண்டு 1,52,922 ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொண்ட நிலையில், சுமார் 551 நிறுவன ஊழியர்கள் கட்டாயப் பணிநீக்கத்தை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது. Indian Bank Job: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. இதுதான் கடைசி தேதி.! 

தொடரும் வேலை இழப்பு அபாயங்கள்:

நடப்பு ஆண்டில் இதுவரை 204 தொழில்நுட்ப நிறுவனங்கள் கிட்டத்தட்ட 67,749 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 1,78,296-க்கும் மேற்பட்டோர் பணிகளை இழந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் திடீர் பணி நீக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். பணியாளர்களில் 30% பேரை AI செயல்படுத்தல் காரணமாக பணிநீக்கம் செய்துள்ளனர். ஒரு சில நிறுவனங்கள் தனது மொத்த சேவையையும் நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஐடி மட்டுமல்லாது தொழில்நுட்ப பணிகளில் வேலைப்பார்கள் ஊழியர்களின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் வேலை வெட்டு அறிவிப்புகள்:

கடந்த சில மாதங்களில் பல முன்னணி நிறுவனங்கள் எச்சரிக்கையின்றி ஊழியர்களின் பணியை நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் காரணமாக சில பகுதிகளில் சேவைகளை குறைப்பதும், ஊழியர்களை இடைக்காலமாக விடுவிப்பதும் நிகழ்கின்றது. இதனால் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்ப்போரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.