ஏப்ரல் 25, இட்டாநகர் (Arunachal Pradesh News): அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், கனமழை காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு திபாங் பள்ளத்தாக்கை (Dibang Valley) இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 33-ல் நிகழ்ந்துள்ளது. Sodium Ion Battery: தென்கொரிய விஞ்ஞானிகள் அசத்தல்; உயர் சக்தி கொண்ட சோடியம் அயன் பேட்டரி கண்டுபிடிப்பு..!

மலையில் இருந்து வரும் மழைநீர் அருவி போல கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையில் பாறை கற்கள் மற்றும் மணல்கள் விழுந்துள்ளன. மேலும், அங்கு பெரும் பள்ளம் ஏற்பட்டு சாலை துண்டானது. இதன்காரணமாக, ஹூன்லி-அனினி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீன எல்லை பகுதியில் உள்ள ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாலையை சீரமைக்கும் பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, சீரமைப்பு பணிகள் நடைபெறுவதில் பெரும் சிரமம் நிலவுகிறது.