Chennai Police Killed by Rowdy Gang: ஆயுதப்படை காவலர் ரௌடி கும்பலால் கொடூர கொலை.. 2 நாட்களாக போராடி பறிபோன உயிர்.. மதுபோதையில் வெறிச்செயல்.!

மைதானத்தில் வந்து மதுபானம் அருந்தி தகராறு செய்த ரௌடி கும்பலை கண்டித்த ஆதப்படை காவலர் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிகார கும்பலின் கேடுகெட்ட செயலால் காவலர் மரணமடைந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Armed Force Officer Vijayan Murder Case Accuse

பிப்ரவரி 10, ஆலந்தூர்: சென்னையில் உள்ள ஆலந்தூர், கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன் (வயது 32). இவர் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை 2ம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு விஜயன், தனது மைத்துனர் வாசுதேவன் என்பவரோடு பழவந்தாங்கல் சந்தைக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தபோது, வாசுதேவனின் நண்பர் அஜ்மல் என்பவர் போனில் தொடர்பு கொண்டுள்ளார். கண்ணன் காலனி மைதானத்தில் மர்ம நபர்கள் கொண்ட 5 பேர் குழு மதுபானம் அருந்திக்கொண்டு இருப்பதாகவும், அதனை கேட்கச்சென்றபோது வாக்குவாதம் செய்து தன்னை தாக்கியதாகவும் அஜ்மல் தகவல் சொல்லியுள்ளார்.

இதனையடுத்து, வாசுதேவன் மற்றும் விஜயன் அங்கு நேரில் சென்று, மர்ம கும்பலிடம் விசாரித்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் வாசுதேவன், விஜயன், அஜ்மல் ஆகியோரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காவலராக விஜயனின் நெற்றிப்பொட்டு, தலை பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. Syria wants Help: தனது நாட்டு மக்களுக்கு உதவி செய்ய இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்த சிரியா.. வங்கிக்கணக்கு விபரங்கள் இதோ.!

அவரை மீட்ட வாசுதேவன் மற்றும் அஜ்மல் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க, அவர்கள் மேல் சிகிச்சைக்கு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த காவலர் விஜயன், நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலரின் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பரங்கிப்பேட்டை காவல் துறையினர் குற்றவாளிகளான அஜித், வினோத், ரவிக்குமார் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான மணிகண்டனுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 10, 2023 09:35 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement