Chennai HC On NLC Issue: "சோழநாடு சோறுடைத்து" - என்.எல்.சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி., முழு விபரம் உள்ளே.!

விளை நிலத்தில் நெற்கதிர்கள் விளைச்சலில் இருந்தபோதிலும், அதனை கண்டுகொள்ளாது புல்டோசர் உட்பட கனரக வாகனங்களை கொண்டு கால்வாய் அமையும் பணிகள் நடைபெற்று வந்தன. தான் அரும்பாடுபட்டு வளர்த்து வந்த நெற்கதிர்கள் இயந்திரங்களின் பிடியில் சிக்கி அழிந்ததை கண்டு விவசாயிகள் வெகுண்டெழுந்துள்ளனர்.

Chennai High Court | Women at Paddy Field (Photo Credit: Facebook)

ஜூலை 28 , நெய்வேலி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்வேலி என்.எல்.சி (Neyveli NLC Issue) அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அந்நிலத்தில் விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென என்.எல்.சி நிர்வாகம் விளைநிலத்தின் மீது கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்காக விளை நிலத்தில் நெற்கதிர்கள் விளைச்சலில் இருந்தபோதிலும், அதனை கண்டுகொள்ளாது புல்டோசர் உட்பட கனரக வாகனங்களை கொண்டு கால்வாய் அமையும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதனைக்கண்டு கொதித்துப்போன விவசாயிகள் தங்களின் விளைநிலத்தில் இறங்கி கண்ணீருடன் தங்களின் மன வேதனையை வெளிப்படுத்தி வந்தனர். என்.எல்.சி நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் தலைமையில் இன்று நெய்வேலி என்.எல்.சி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் இறுதியில் அன்புமணியின் கைது காரணமாக கலவரத்தில் முடிந்தது. அன்புமணி உரையாற்றும்போது, என்.எல்.சி நிர்வாகம் கால்வாய் அமைக்கும் பணியை நாளை தொடங்கினாள் கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காலவரையற்ற சாலை மறியல் நடைபெறும். நெய்வேலி என்.எல்.சி காரணமாக பாதிக்கப்படும் மாவட்டங்களை ஸ்தம்பிக்க வைப்போம்" என எச்சரிப்பதாக பேசியிருந்தார். Tumakuru Fight: அரசு பேருந்தில் இடம்பிடிப்பதில் தகராறு; தலைமுடியை பிடித்து 2 பெண்கள் சண்டை.!

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினர் மீது கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. பதிலுக்கு காவல் துறையினரும் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். கல்வீச்சு சம்பவத்தில் காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டதால், வானை நோக்கி பலமுறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு அனைவரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். பின் பாமக தலைவர் அன்புமணியின் கோரிக்கையை ஏற்று அமைதியாக அனைவரும் கைதாகினர். ஒருசில நொடிகளில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், நெய்வேலி என்.எல்.சி நிர்வாகம் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி நிர்வாகம் - தொழிலாளர்கள் சங்கங்களுக்கு இடையேயான பிரச்சனையில் வேலை நிறுத்தம் தொடர்பான போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டி அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. Lorry Falls to Valley: மலைப்பாதைகளில் வளைவில் கவனம் தேவை; எச்சரிக்கையை ஆதாரத்துடன் உணர்த்தும் அதிர்ச்சி வீடியோ..!

Neyveli NLC PMK Party Protest (Source)

விசாரணையின்போது நீதிபதி முதற்கட்டமாக என்.எல்.சி பணியாளர்களுக்கான தேவைகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, தனது தரப்பு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, என்.எல்.சி நிர்வாகத்தின் இரண்டு நாட்கள் செயல்பாடுகளை மேற்கோளிட்டு கேள்விகளை எழுப்பினார்.

அப்போது பதிலளித்த என்.எல்.சி நிர்வாகம், "நிலத்தின் மதிப்பை விட 3 மடங்கு அதிகம் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை கையகப்படுத்தி, 10 ஆண்டுகளுக்கு முன் இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்" என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனைக்கேட்டு குறுக்கிட்ட நீதிபதி, "20 ஆண்டுகள் காத்திருந்த நிர்வாகம், பயிர்கள் அறுவடை செய்யும் 2 மாதங்கள் காத்திருக்க இயலாதா?. பயிரிடப்பட்ட நிலத்தில் பெரிய அளவிலான இயந்திரங்களை வைத்து நிலத்தை பிளந்து கால்வாய் அமைப்பதை கண்டு கண்ணெல்லாம் கலங்குகிறது. "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என கூறிய வள்ளலார் பெருந்தகை வீடுகொண்ட பகுதிக்கு மிக அருகே இருக்கும் ஊரில் விவசாய நிலத்திற்கு இப்படியொரு கொடுமை நடக்கலாமா?. Too much of good thing can harmful: அதிகளவு வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை ஏற்படுமா?.. வாழைப்பழ விரும்பிகளே கவனம்.!

PMK Leader Anbumani Ramadoss Protest against Neyveli NLC (Photo Credit: Source)

இதனை எங்களால் காண இயலவில்லை. நிலத்தை எடுக்க ஆயிரம் காரணங்கள் கூறினாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. பயிரை சாதரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. மனிதன் உட்பட பல உயிரினங்களுக்கு பயிர் வாழ்வாதாரமாக இருக்கிறது. இழப்பீடு வழங்கப்பட்ட போதிலும், பயிர்களை அழிக்க உரிமையை யார் கொடுத்தது?.

நாம் உயிருடன் இருக்கக்கூடிய காலகட்டத்திலேயே காய்கறி, அரிசியாக அடித்துக்கொள்ளும் மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கவுள்ளோம். என்.எல்.சி நிர்வாகம் இவ்விவகாரத்தில் கோபம் கொண்டாலும் பிரச்சனை இல்லை. விளைபயிர்களை அழித்து கிடைக்கும் நிலக்கரி தேவையா?. நிலக்கரி பயன்படாது. பேசித்தீர்க்கும் பிரச்சனையை இவ்வுளவு பெரிய விஷயமாக ஆக்கியுள்ளீர்கள். பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் நிலக்கரிக்காக தோண்டுகிறீர்கள். Stefan Lainer Cancer: பிரபல ஆஸ்திரிய கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் லைனெருக்கு புற்றுநோய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

"சோழ நாடு சோறுடைத்து" என்ற பெருமையை என்.எல்.சி போன்ற நிறுவனத்தால் இழக்கப்பட்டு வருகிறது. காவேரி டெல்டா, தாமிரபரணி உட்பட முக்கிய நெற்பயிர்கள் விளையும் நிலங்கள் பல தொழிற்சாலைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன. இன்று ஒருநாள் எனது அறையில் இருக்கும் குளிரூட்டியை அணைக்க ஆணையிடுகிறேன். இயற்கை காற்றுடன் வாழுபவர்கள் எவ்வுளவோ நபர்கள் இருக்கிறார்கள், இதனை அதிகாரிகளும் உணர வேண்டும்.

ஏக்கர் நிலத்தில் இலாபமோ நஷ்டமோ தனது பொறுப்பாக ராஜாவாக வேலை பார்த்து வந்த விவசாயி மற்றொருவரிடம் கைகட்டி வேலைபார்க்க மாட்டார் தான். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தான் புரியவைக்க வேண்டும். அடக்குமுறைகள் அல்லது அவர்களின் உணர்வுடன் விளையாடும் செயல்கள் கண்டிக்கத்தக்கது" என தனது கண்டனத்தையும், ஆதங்கத்தையும் நீதிபதி வெளிப்படுத்தினார்.

PMK Supporter Flag on Neyveli NLC (Source)

என்.எல்.சி போராட்டத்தின்போது அன்புமணி என்.எல்.சி எதற்கு வேண்டாம் என கூறுகையில், "என்.எல்.சி நிர்வாகம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலிக்கு வரும்போது, இப்பகுதிகளில் தன்னூற்று என்ற நிலை இருந்தது. நிலத்தின் அடியில் 8 அடி ஆழத்தில் நீர் இருந்தது. ஆனால், இன்று 800 அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர் சென்றுவிட்டது. நெய்வேலி என்.எல்.சி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் காற்று மாசு கடுமையாக ஏற்பட்டுவிட்டது. Chat GPT Fine: 687 பேரின் தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் கசியவிட்ட சாட் ஜிபிடி; ரூ.2.5 இலட்சம் அபராதம் விதித்த தென்கொரிய அரசு.!  

60 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் எடுத்தவர்களுக்கு இன்று வரை சரியான வேலை வழங்கப்படவில்லை அல்லது நிரந்தர வேலை வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிர்வாகத்திடம் ஏற்கனவே தேவைக்கு அதிகமான நிலம் உள்ளது. அங்கு நிலத்தை வெட்டி நிலக்கரி எடுக்கலாம் என்ற நிலையில், புதிய நிலத்திற்காக மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பது ஏன்?. தனியாருக்கு தாரை வாங்கப்படும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதற்கு நிலம்?.

ஏழை மக்களுக்கு, இங்கு நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய மதிப்பு அளித்து நிரந்தர வேலை கொடுத்த நிறுவனம் எதற்காக நிலம் எடுக்க வேண்டும்?. விவசாய நிலத்தில் கால்வாய் அமைக்க, விளைச்சலில் உள்ள நெற்பயிர்களை அழித்தது ஏன்?. அப்பாவி விவசாயியாக யார் குரல் கொடுப்பது?. நெற்பயிரை அழித்து நிலத்தை கிழித்து கால்வாய் அமைப்பது தாயின் கருவறையை கிழித்து பார்ப்பதற்கு சமம்" என பேசினார்.

ஷங்கர் ஜிவால் நெய்வேலி  பயணம்: பாமகவின் போராட்டம் வன்முறையில் முடிவடைந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் 3000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள பல காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு மாநில காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கலவரம் மற்றும் நிலைமையை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக காவல் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடைபெறவுள்ளது. இவ்விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement