Yellow Alert: 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Yellow Alert (Photo Credit: Pixabay)

ஜனவரி 05, சென்னை (Chennai): தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மதியம் 1 மணி வரை ) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி மற்று புதுச்சேரி பகுதிகளில் (மஞ்சள் அலர்ட்) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. Bus Conductor Attacked: மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஊழியர்... பணியிடை நீக்கம்..!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.