Bus Conductor Attacked: மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஊழியர்... பணியிடை நீக்கம்..!
கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
ஜனவரி 05, கன்னியாகுமரி (Kanniyakumari): கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைகடை பகுதியை சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனை குலசேகரத்திலிருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்தில் வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வெளியானது. மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் குலசேகரம் அருகே உள்ள ஆற்றூரில் இருந்து மாசாணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது நடத்துநர் பணம் கேட்ட பொழுது மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் நடத்துனர் காந்தி மற்றும் ஓட்டுனர் பத்மகுமார் ஆகியோர் பேருந்திலேயே வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டனை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய ஓட்டுனர் பத்மகுமார் மற்றும் நடத்துனர் காந்தி என இருவரையும் ராணிதோட்ட அரசு போக்குவரத்து கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா படுதோல்வி... வரலாறு படைத்த இந்திய அணி..!
மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல்#kanniyakumari pic.twitter.com/UVTl46qSPe
— Backiya (@backiya28) January 5, 2024
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 10:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

