வானிலை: 14 மாவட்டங்களில் இன்று இடி-மின்னலுடன் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

வங்கக்கடல் பகுதியில் உருவான புயல் கரையை கடந்துவிட்டபோதிலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை தொடர்ந்து வருகிறது.

Tomorrow Weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 25, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ மழை பெய்துள்ளது. புதுவையில்‌ மிக லேசான மழை பதிவானது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில்‌ தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணை பகுதியில் 15 செமீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 13 செமீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, கோழிப்போர்விளை, நெய்யூர் ஆகிய பகுதிகளில் தலா 11 செமீ மழையும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 11 செமீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் 11 செமீ மழையும் பெய்துள்ளது. அரியலூர், கடலூர், மதுரை, சிவகங்கை, புதுச்சேரி, பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தர்மபுரி, கடலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் நேற்று அதிகபட்சமாக 35.9 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும், ஈரோட்டில் 18.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையை பொறுத்தவரையில், நேற்று (24-10-2024) வடமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலைகொண்டிருந்த தீவிர புயல்‌ (டானா), வடக்கு- வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, இன்று (25.10.2024) அதிகாலை 01:30 - 03:30 மணிக்கு இடையே வடக்கு ஒரிசா கடற்கரையில்‌, பிதர்கனிகா மற்றும்‌ தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ ஒரு கீழடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

25.10.2024 இன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர்‌, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி, நாமக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Tamil Thaai Vaalthu: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி; தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

26.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, தென்காசி, இருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 27.10.2024 முதல்‌ 31.10.2024 வரையில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை வானிலை நிலவரம் (Today 25 Oct Weather Forecast in Chennai):

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27: செல்‌சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fishermen's Weather Update):

25 .10.2024 முதல்‌ 29 .10.2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை

25.10.2024 மற்றும்‌ 26.10.2024 வரை: வடமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, 25-10-2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல்‌ 105 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 115 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வங்காளம்‌ மற்றும்‌ ஒரிசா கடற்கரை பகுதிகள்: 25-10-2024 மாலை வரை சூறாவளிக்‌ காற்று வடக்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில்‌, மணிக்கு 80 முதல்‌ 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதன்‌ பிறகு காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறையக்கூடும்‌. 25-10-2024 மாலை வரை சூறாவளிக்‌ காற்று தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில்‌, மணிக்கு 60 முதல்‌ 80 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 90 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. அதன்‌ பிறகு காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறையக்கூடும்‌.

மத்திய வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகள்: 25-10-2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதன்‌ பிறகு காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறையக்கூடும்‌.

மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகள்‌: 25-10-2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதன்‌ பிறகு காற்றின்‌ வேகம்‌ படிப்படியாக குறையக்கூடும்‌.

27.10.2024 முதல்‌ 29 .10.2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை

25.10.2024 மற்றும்‌ 26.10.2024: கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35

முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

27.10.2024 முதல்‌ 29 .10.2024 வரை: ஏதுமில்லை

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

காற்றின் நகர்வுகள், வானிலை அறிவிப்புகளை உடனுக்குடன் Windy.com ல் தெரிந்துகொள்ளுங்கள்..