Thatchankurichi Jallikattu 2025 (Photo Credit: @Sunnewstamil X)

ஜனவரி 04, தச்சங்குறிச்சி (Pudukkottai News): ஆங்கில புத்தாண்டு 2025ஐ உலகமே வரவேற்று, புத்தாண்டில் தங்களின் இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில், பொங்கல் பண்டிகை ஆங்கில புத்தாண்டைத் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகமெங்கும் உள்ள பகுதிகளில் கொண்டாட்டங்கள், சிறிய அளவிலான போட்டிகள் களைகட்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி:

அதேபோல, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் களைகட்டும். அலங்காநல்லூர், பீளமேடு ஜல்லிக்கட்டுகள் பொங்கல் பண்டிகை அன்று நடக்கும். இதனை காண உள்ளூர் முதல், வெளிநாடு வரை பலரும் வந்து ரசிப்பார்கள். இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி இருக்கிறது. Pattukkottai: நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்.. முந்திச்செல்ல முயன்ற அரசுப்பேருந்தால் எமனை நேரில் பார்த்த சம்பவம்.!

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர்வக்கோட்டை தாலுகா, தச்சங்குறிச்சி பகுதியில், 2025ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யானதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரம்:

இன்று காலை 8 மணிக்கு மேல் தொடங்கிய போட்டி, மாலை 4 மணிவரை நடைபெறும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசும், ஜல்லிக்கட்டு போட்டி நிர்வாகமும் முன்னெடுத்துள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில், காளையினால் காயம் ஏதும் ஏற்பட நேர்ந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரும், மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

நியூஸ் 18 தொலைக்காட்சியின் நேரலையை இங்கு காணவும்:

 

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேரலையை இங்கு காணவும்:

 

சன் தொலைக்காட்சியின் நேரலையை இங்கு காணவும்: