ஜனவரி 04, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டியில் (Guindy) அண்ணா பல்கலைக்கழகம் (Anna University News) செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ - மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு என பிரத்தியேக விடுதி வளாகமும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், அண்ணா பல்கலை.,யில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, ஞானசேகரன் (37) என்ற நபரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. Gold Silver Price: நேற்று உயர்வு, இன்று வீழ்ச்சி.. தங்கத்தின் விலை இன்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat):
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் (Kotturpuram Police Station) காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா பல்கலை., வளாகத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காவல்துறை விசாரணை:
மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்ற வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நடத்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.