Sattur Fireworks Factory Explodes (Photo Credit: @SunnewsTamil / @Sathyamnews X)

ஜனவரி 04, சாத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் (Sattur), அப்பய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்ராம் பட்டாசு (Sairam Fireworks Factory) தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே, இன்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்தது. அப்போது, அங்கிருந்த 4 அறைகள் தரைமட்டமான நிலையில், பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த 6 பேர் பலியாகி இருக்கின்றனர். Anna Univserity: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விசாரணை.!

6 பேர் பலி எனத் தகவல்:

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக, ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் & மீட்புப் படையினர், விபத்தில் உயிரிழந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணா, மீனாச்சி சுந்தரம் உட்பட 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி இருக்கின்றனரா? எனவும் சோதனை நடைபெறுகிறது.

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது.