ஜனவரி 01, ஹைதராபாத் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் முன்னணி நடிகராக அறியப்படும் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வந்தார். அரசியல் அதிரடி கொண்ட கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுத, ஷங்கர் இயக்கி இருக்கிறார். ரூ.400 கோடி செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், 3டி, ஐ-மேக்ஸ் முறையிலும் உலகளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10, 2025 அன்று வெளியாகிறது. அன்றைய தினம் தெலுங்கு மொழிபேசும் மக்கள் வசிக்கும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை சிறப்பிக்கப்படும். சங்கராந்தி 2025 பண்டிகையை முன்னிட்டு கேம் சேஞ்சர் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நாளை (02 ஜனவரி 2025) அன்று, மாலை 05:04 மணியளவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Rajinikanth: "நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான்" - ரஜினிகாந்த் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

டிரைலர் வெளியிடும் தேதி தொடர்பான அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)