ஜனவரி 04, சென்னை (Kitchen Tips): கல்யாண வீட்டு ஸ்டைலில் பல்வேறு ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில் எல்லோருக்கும் பிடித்தமான வத்தக்குழம்பு (Vatha Kulambu) கல்யாண வீட்டு ஸ்டைலில் எப்படி சுவையாக செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இது அனைவருக்கும் பிடித்தமான வகையில் ருசியாக இருக்கும்.
பொடி செய்ய தேவையானவை:
மல்லித் தூள் - 2 கைப்பிடி அளவு
சிவப்பு மிளகாய் - 6
துவரம் பருப்பு -2 மேசைக்கரண்டி
வெந்தயம், சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
இவையனைத்தையும் எண்ணையில்லாமல் வறுத்து, பின்பு இதனை மிக்ஸியில் நன்றாக பவுடர் போல அரைத்துக் கொள்ளவும். Rava Semiya Paniyaram Recipe: வீட்டில் ரவா, சேமியா இருக்கா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தாளிக்க தேவையானவை:
கடுகு, வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
கருவேப்பிலை - 1 கொத்து
குழம்பு செய்வதற்கு தேவையானவை:
மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
வத்தல் - தேவையான அளவு
பூண்டு - 1 கையளவு
வெங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு, புளி - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் ஒன்றரை குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்றி, எண்ணெய் சூடான பிறகு கடுகு, சிவப்பு மிளகாய் 2, வெந்தயம் 1 மேசைக்கரண்டி, கருவேப்பிலை, வத்தல் தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
- வத்தல் நன்றாக கருத்து வரும் வரை வதக்கவும். பின், அதில் வெங்காயம் சிறிதளவு, பூண்டு 1 கையளவு (தோல் நீக்கியது) சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம், பூண்டு பொன்னிறமான பிறகு புளிக்கரைசலை தேவையான அளவு ஊற்ற வேண்டும்.
- பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, 1 கொதி வரும் வரை வேக வைக்கவும். கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியை 4 மேசைக்கரண்டி சேர்க்கவும்.
- அதில் 1 சிட்டிகை பெருங்காய தூள், நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இப்போது, அடுப்பை அணைத்து விட விடவும். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு வத்தக்குழம்பு தயார்.