Pongal | MK Stalin File Pic (Photo Credit: Wikipedia)

ஜனவரி 04, சென்னை (Chennai News): பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை (Pongal Holidays) அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

பொங்கல் விடுமுறை 2025:

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று, தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், ஜனவரி 15,16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

தொடர் விடுமுறை:

இதனையடுத்து, கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் (CM MK Stalin) அவர்கள், ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 25ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.