Journalist Found Dead (Photo Credit: @MeenuJha0211 X)

ஜனவரி 04, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில், செய்தி தொலைக்காட்சியில் முகேஷ் சந்திரகர் (வயது 28) என்பவர் பத்திரிக்கையாளராக (Journalist) பணிபுரிந்து வந்தார். இவர், பஸ்தாரில் (Bastar) 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு எதிராக அறிக்கையை, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி, சுரேஷ் சந்திரகர் செயல்பாடுகள் குறித்து அம்மாநில அரசு விசாரணை நடவடிக்கையை தொடங்கியது. Army Vehicle Accident: ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 4 ராணுவ வீரர்கள் பலி..!

பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு:

இந்நிலையில், கடந்த ஜனவரி 01ஆம் தேதி இரவு முதல் முகேஷ் காணாமல் போனார். சுரேஷ் சந்திரகரின் சகோதரர் ரித்தேஷ் ஏற்பாடு செய்த சந்திப்பைத் தொடர்ந்து முகேஷின் தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டதால், அவரது சகோதரர் யுகேஷ் சந்திரகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நேற்று (ஜனவரி 03) சட்டன்பாரா பகுதியில் உள்ள சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் முகேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கொலை வழக்கு:

இதையடுத்து, காவல்துறையினர் முகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்திரிக்கையாளர் முகேஷ் கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அவரது சகோதரர்கள் தினேஷ் மற்றும் ரிதேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.