UAE Jobs for Welder (Photo Credit: Pixabay)

ஜனவரி 04, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை (Welfare of Non-Resident Tamils) சார்பில், வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் இளைஞருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பான பணிக்கு வழிவகை செய்யப்படுகிறது. அதன்படி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் (Jobs in UAE) வெல்டர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசின் அறிவிப்பு பின்வருமாறு., Anna Univserity: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விசாரணை.! 

கல்வித்தகுதி & பிற விபரங்கள்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், பைப்பிங் பேப்ரிகேட்டர், பைப்பிங் பிட்டர், ஸ்ட்ரக்சர் ஃபேப்ரிகேட்டர், ஸ்ட்ரக்சர் பிட்டர், கிரைண்டர் கேஸ் கட்டர், பைபிங் போர் மேன் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்தப் பணிகளுக்கு கல்வி தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மூன்று வருடங்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். வயதுவரம்பு 44 க்குள் இருக்கலாம். உணவு, இருப்பிடம் ஆகியவை வேலை வழங்குபவரால் வழங்கப்படும். இது தொடர்பான பணிக்கு செல்ல விருப்பம் உடையோர் (ஆண்கள் மட்டும்) www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். Gold Silver Price: நேற்று உயர்வு, இன்று வீழ்ச்சி.. தங்கத்தின் விலை இன்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.! 

தேவையான ஆவணங்கள்:

சுயவிபரம், பணி அனுபவ சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களை ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 044 22502267, 95662 39685 (வாட்சப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஐக்கிய அமீரகத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக அரசின் அறிவிப்பு: