ஜனவரி 02, கிருஷ்ணாவரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாவரம் பகுதியில் காரில் கஞ்சா (Ganja) கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், கிருஷ்ணாவரம் சுங்கச்சாவடியில் (Krishnavaram Toll Plaza) காவல்துறையினர் கார்களை சோதனை செய்து வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வந்தது. அதனை சோதனை செய்யும் போது, காவலர் மீது அந்த கார் மோதி வேகமாக தப்பிச்சென்றது. இதில், ஒரு காவலர் படுகாயமடைந்தார். மேலும், மற்றொரு கான்ஸ்டபிள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. School Bus Accident: திடீரென தலைகுப்புற கவிழ்ந்த பள்ளிப் பேருந்து.. விபத்தில் பலியான குழந்தை.. 18 பேர் காயம்..!

சிசிடிவி வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)