Processed Foods | India Workers (Photo Credit: Pixabay)

ஜனவரி 04, சென்னை (Chennai): அதிகரித்து வரும் கலாச்சார மோகம் காரணமாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் இந்தியர்களால் விரும்பப்பட்டு வருகிறது. உணவு, குளிர்பானங்கள் என இந்தியர்களும் தங்களின் செலவுகளில் பிரதான பங்கை பதப்படுத்தப்பட்ட (Processed Foods India) உணவுகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் இந்தியர்களிடம் உடற்பருமன், நீரிழிவு நோய், இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன.

கிராமப்புற இளைஞர்களும் வாங்குகின்றனர்:

மத்திய அரசு சமீபத்தில் 2023 - 2024ம் ஆண்டுக்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட்டது. இதில் கிராமப்புற இளைஞர்கள் தங்களின் மாத பட்ஜெட் தொகையில், 9.84% பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்க செலவு செய்கின்றனர். நகர்ப்புற இளைஞரின் மாத பட்ஜெட்டில், 11.09% தொகை பதப்படுத்தப்பட்ட உணவுக்கு செலவிடப்படுகிறது. 20 ஆண்டுகளாக 10% க்கும் கீழ் இருக்கும் நிலையில், தற்போது அவ்வரம்பு அதிகரித்து இருக்கிறது. இதுவே எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது. Health Tips: குளிருக்கு மதுபானம் அருந்தும் மதுபிரியர்களே.. மொத்தமும் முடிந்துவிடும் ஜாக்கிரதை.. ஆய்வில் பேரதிர்ச்சி தகவல்.! 

பழங்களை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு முக்கியத்துவம்:

இந்திய அளவில் சுமார் 2.61 இலட்சம் வீடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், உணவு நுகர்வு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. நகர்புறத்தில் உணவு செலவினத்தில் 39% பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள் ஆகும். பழங்கள், காய்கறிகள், இறைச்சிகளை விட உடலுக்கு கேடுகளை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவு நோக்கிய படையெடுப்பு அதிகரித்து இருக்கிறது.

உடல்நல பிரச்சனைகள் அதிகரிப்பு:

உப்பு, சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்பு அதிகம் இருப்பது காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவோர் உடற்பருமன், நீரிழிவு நோய்களுக்கும் வழிவகை செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவின் ஆரோக்கியமற்ற விளம்பரத்தை ஊக்குவித்து மக்களின் எண்ணத்தை மாற்றி இலாபம் அள்ளுவதாக சமூக ஆர்வலர்களும் குறிப்பிடுகின்றனர்.