வானிலை: இன்று 12 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு; மக்களே ஜாக்கிரதை.. பேய்மழை அலர்ட்.!
தமிழகத்தை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நவ.25, 2024 அன்று பல மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 08:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்குவங்கக்கடலில் மத்திய - அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 600 கிமீ தொலைவிலும், புதுசுஹிரிக்கு தென்கிழக்கே 980 கிமீ தொலைவியிலும், சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 1050 கிமீ தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வரும் 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் 2 நாட்கள் கழித்து தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என சென்னை வானிலை (Weather) ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
இதனால் 26-11-2024 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 3-Year-Old Baby Dies: டீயுடன் பிஸ்கட் ஊட்டியபோது துயரம்.. 3 வயது குழந்தை பரிதாப பலி.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
27-11-2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை (Chennai Weather Today):
அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30” செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பறிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
26-11-2024 அன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-11-2024 மற்றும் 28-11-2024 வரையில் வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள், வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன், துல்லியமாக Windy.com ல் பெறுங்கள்..