நவம்பர் 25, டெல்லி (New Delhi): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது (Parliament Winter Session) நவம்பர் 25ம் தேதியான இன்று முதல் தொடங்கி, வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எனவும், 5 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம். அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Google Map Wrong Direction: கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்.. கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. வாகன ஓட்டிகளே உஷார்.!
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் 12 மணிக்கு அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து முழக்கம் எழுப்பினர். ஆனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா அத்தகைய விவாதங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே தொடர் அமளி காரணமாக இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாளை மறுதினம் (நவ.27ம் தேதி) காலை 11 மணிக்கு அவை மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.