கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.!

காலை முதலாக வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Holiday Tamilnadu (Photo Credit: X)

ஜூன் 20, வால்பாறை (Coimbatore News): தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. Delhi Firing Incident: டெல்லி உணவு விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி.. டெல்லியில் பரபரப்பு..!

4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு இருக்கிறார். அதேவேளையில், இன்று காலை 10 மணிவரையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.