Congress KS Alagiri Vs BJP Annamalai: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நிற்பதா?.. காகித புலி பாஜகவுக்கு நேரடி சவால் விடுத்த கே.எஸ் அழகிரி..!

நேற்று வரை நாங்கள் பெரிய கட்சி என கூறி வந்தவர், இடைத்தேர்தலில் எதற்கு பின்வாங்குகிறார்? என சரமாரி கேள்விகள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

KS Alagiri Vs Annamalai (Photo Credit: Twitter)

ஜனவரி 25, ஈரோடு: கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை (2021 Assembly Election, Tamilnadu) தேர்தலில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவையில் (Erode East Constitution) இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா (Thirumagan EVRa, Congress Party) மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 28 இடைத்தேர்தல் (Erode East ByPoll) அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுகவின் கூட்டணியில் (DMK Alliance) அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் அங்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (EVKS Elangovan) போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் (AIADMK Alliance) கூட்டணி கட்சிகளான பாஜக (BJP), த.மா.கா (TMC) உட்பட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி (PMK) ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் கிடையாது என அறிவிக்கட்டது.

தேமுதிக (DMDK) சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ் அழகிரி (K.S Alagiri, Tamilnadu State President, Congress), "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது. எங்களது கூட்டணியின் தலைமை இயக்கமான திமுக, நீங்களே போட்டியிடுங்கள் என எங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். Minister Nasar Chair Stone Issue: எதுக்கு சேர் தூக்கிட்டு வர இவ்ளோ நேரம்?… தொண்டர் மீது கற்களை வீசியெறிந்து திமுக அமைச்சர்.. வைரலாகும் வீடியோ.! 

MK Stalin met with EVKS Elangovan File Picture (Photo Credit: EVKS Elangovan Twitter)

அதிமுகவால் இன்று வரை யார் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்று கூற இயலவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எங்களை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நின்றது. இந்த முறை அவர்களையே அழைத்து தொகுதியை வழங்கியிருக்க வேண்டும். எங்களின் கூட்டணி கொள்கை கூட்டணி என்பதால், அதன்பால் அனைவரும் நடந்துகொண்டுள்ளோம். அதிமுகவால் இன்று வரை அதனை செய்யமுடியவில்லை. தமிழ் மாநில காங்கிரசை நட்டாற்றில் கழற்றிவிட்டார்கள்.

பாஜக எங்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. எங்களின் கருத்து என்னவென்றால், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக தெரிவித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வேட்பாளராக அண்ணாமலை (Annamalai, Tamilnadu State President, BJP Party) களமிறங்குவாரா?. நாங்கள் சவால் விடுகிறோம். இதுவரை அண்ணாமலை பாஜகவே அதிமுகவை விட பெரியது என கூறி வந்தவர், தேர்தல் அறிவிப்பு வந்ததும் எங்களின் கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி, அவர்கள் நிற்பார்கள் என கூறியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அமோக வெற்றி அடைவார். நாங்கள் களத்தில் நின்று இருக்கிறோம். ஆனால், எதிரிகளின் படைகள் காணவில்லை. இதுவே தமிழக அரசியலின் எதார்த்தமாக ஆகிவிட்டது" என்று பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 24, 2023 10:37 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).