Shocking Accident: நெஞ்சை உலுக்கும் சோகம்.. தறிகெட்டு ஓடிய அரசு பேருந்தால் 125 ஆடுகள், ஒருவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலி.!
தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் ஓட்டி சென்றவர், 125 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
டிசம்பர் 28, வேப்பூர்: தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து (Govt Bus Hits 125 Goats Died On Spot) மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் ஓட்டி சென்றவர், 125 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் (Kalayarkovil, Sivaganga) பகுதியில் வசித்து வருபவர் காசிநாதன். இவரின் மகன் இலட்சுமணன் (வயது 40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். காசிநாதனின் உறவினர்கள் ராமர், செல்வம், ஐயப்பன். இவர்கள் ஆண்டுதோறும் பல பகுதிகளுக்கு ஆடுகளை அழைத்துச்சென்று பட்டியமைத்து மேய்ச்சலில் ஈடுபடுவது வழக்கம்.
காசிநாதன் 300 ஆடுகளோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் பட்டியமைத்து ஆடுகள் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று இரவு நேரத்தில் காசிநாதன், அவரின் மகன் இலட்சுமணன் எலவனாசூர் கோட்டையில் இருந்து வேப்பூருக்கு (Veppur, Cuddalore) தேசிய நெடுஞ்சாலை வழியே ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். Minor Girl Moleastion: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி; சர்ச்க்கு சென்று வருகையில் நடந்த துயரம்.. 50 வயது நபர் வெறிச்செயல்..!
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணித்த அரசு பேருந்து வேப்பூர் - சேப்பாக்கம் மணிமுக்தாறு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. லட்சுமணனின் மீதும் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 125 ஆடுகள் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பலியானது. லட்சுமணனும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆடுகளின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்குமாக சிதறி இரத்த வெள்ளத்தில் கிடந்தன. தகவல் அறிந்து வந்த வேப்பூர் காவல் துறையினர் லட்சுமணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.