Cuddalore Family Killed Update: காதல் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி விவகாரம்.. குடும்பத்தையே போட்டுத்தள்ளிய பயங்கரம்.! 5 பேர் தீயில் கருகி மரணம்..!

ஆசை ஆசையாய் காதலித்து, காதலின் அடையாளமாய் 9 மாத கைக்குழந்தைக்கு தந்தையானவர், காதல் மனைவியுடன் கொண்ட தகராறில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்து மனைவி, மனைவியின் அக்கா, அவரின் குழந்தைகள், தனது குழந்தை என அனைவரையும் கொல்ல காரணமாக இருந்து தானும் தீயில் எரிந்து மறைந்துபோன சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Visuals from Spot

 

பிப்ரவரி 09, செல்லாங்குப்பம்: கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை (Chidambaram) சேர்ந்தவர் சத்குரு. நல்லாத்தூர் செல்லாங்குப்பம் (Sellankuppam, Nallathur) கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர்கள் இருவரும் கடலூரில் இருக்கும் மருத்துவமனையில் பணியாற்றிவந்தபோது காதல் (Love) வயப்பட்டு பின்னர் திருமணம் (Marriage) செய்துகொண்டுள்ளார்.

சத்குரு தன்னை சாதி மறுப்பாளராக (Caste Denial) அடையாளம் காண்பித்துக்கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னர் மதுபோதைக்கு (Liquor Alcohol) அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதும், ஊரை சுற்றுவதுமாக இருந்துள்ளார். தம்பதிகளுக்கு பிறந்து 9 மாதமான ஆண் குழந்தையும் (Boy Baby) இருந்துள்ளது.

சத்குருவின் மதுபான பழக்கம் காரணமாக குடும்பத்திற்குள் (Family Problem) விரிசல் விழத்தொடங்க, ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த தனலட்சுமி, 9 மாதமேயான லஷ்மனுடன் தனது சகோதரி தமிழரசியின் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் மனைவியான தனலட்சுமி - சத்குரு விவாகரத்து பெறவும் முடிவெடுத்துள்ளனர். Karnataka Dalit Women Beaten: தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செருப்பால் தாக்கிய பயங்கரம்.. இப்படியும் ஒரு காரணத்திற்காக பெரும் கொடுமை…!

இதனையடுத்து, விவாகரத்து விபரம் இருவருக்கும் இடையே சண்டையை அதிகரித்துள்ளது. நேற்று காலை நேரத்தில் சத்குரு தனது மனைவி தனலட்சுமியை அவரின் அக்கா தமிழரசியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடக்கூறி பேசியுள்ளார்.

விவாகரத்து விசயத்திற்கு தனலட்சுமி ஒப்புக்கொள்ளாத நிலையில், ஆத்திரமடைந்த சத்குரு வீட்டை உட்புறமாக தாழிட்டு பெட்ரோலை தன் மீது ஊற்றி மிரட்டியுள்ளார். அப்போது, பெட்ரோல் (Petrol) கேனை தனலட்சுமி தட்டிவிட்டபோது பெட்ரோல் வீட்டில் முழுவதும் சிதறி, எரிந்துகொண்டு இருந்த விறகடுப்பில் பட்டு தீப்பற்றியுள்ளது.

இந்த தீ விபத்தில் தனலட்சுமி, தமிழரசி, தமிழரசியின் மாமியார் செல்வி, குழந்தைகள் லக்ஷ்மன், ஹாசினி ஆகியோர் உயிருக்காக அலறித்துடிக்க, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு (Fire & Rescue Team) படையினர் அனைவரையும் மீட்டனர். ஆனால், சத்குரு, தனலட்சுமி, செல்வி ஆகியோர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.

பிற அனைவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துவிட, மருத்துவமனையில் (Hospital) சத்குரு, தனலட்சுமியும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செல்வி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை உயிராக காதலித்த பெண்ணை சாதிமறுத்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து விவகாரத்தில் தம்பதி மட்டுமல்லாது குடும்பமே உயிரை இழந்துள்ள சோகம் கடலூரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 09, 2023 04:25 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement