Vijaya Prabhakaran: ஹிந்தி படி, படிக்காதான்னு இரு தரப்பு.. நாம செய்ய வேண்டியது என்ன?.. தேமுதிக விஜய பிரபாகரன் பளீச் பேச்சு.!

இவர்களின் ஆட்சி போட்டோசூட் ஆட்சியாக இருக்கிறது என விஜய பிரபாகரன் பேசினார்.

Vijaya Prabhakar | Classroom File Pic (Photo Credit: @Polimernews / @mdunis59 X)

அக்டோபர் 20, அந்தியூர் (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் (Anthiyur), தேரடி திடலில் நேற்று (அக்.19) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய பிரபாகரன் (Vijaya Prabhakar) கலந்துகொண்டார். அவருக்கு தேமுதிக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விஜய பிரபாகரன் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

மன்னிப்பு கேட்ட பின்னும் அரசியலாகிறது:

அவர் பேசுகையில், "ஆளுநர் (Governor RN Ravi) கலந்துகொண்ட நிகழ்ச்சியில் "திராவிட திருநாடு" என்ற வார்த்தையை விட்டுவிட்டு தமிழ்த்தாய் (Tamil Thaai Vaalthu) வாழ்த்து பாடியதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அரசியல் செய்கின்றன. திராவிட திருநாடு என்ற வார்த்தையை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது தவறானது. அந்த விசயத்திற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். இதனை அதனுடன் முடிப்பதே நாகரீகமான விஷயம்.

படி-படிக்காதே - கேப்டன் கூறியது என்ன?

ஒருகட்சி (பாஜக) இந்தி படி என்கிறது, மற்றொரு கட்சி (திமுக) இந்தி படிக்காதே என்கிறது. இந்த இரண்டு கட்சியும் தான் நாடையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கிறது. படிக்க வேண்டும், வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. படிக்கக்கூடாது என யாரும் சொல்லக்கூடாது. கேப்டன் ஒரு படத்தில், "என் தாயமொழி எனது கண் மாதிரி, வேற்று மொழி கண்ணாடி மாதிரி, அதனை தேவைப்படும்போது உபயோகம் செய்ய வேண்டும் என பேசுவார். Tiruvannamalai Deepam: திருவண்ணாமலை மகா தீப கொண்டாட்டத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை; துணை முதல்வர் உதயநிதி விளக்கம்.! 

வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் நிலை:

அதேபோல, நாம் பிற மொழிகளையும் கற்றுவைக்க வேண்டும். தமிழ் மொழி படித்தால் தமிழ்நாட்டுக்குள் மட்டுமே நாம் பிழைக்க இயலும். இங்கு வேலைவாய்ப்பில்லாத போது நாம் என்ன செய்ய இயலும்?. வேலைவாய்ப்பில்லாமல் வெளியூர்களுக்கு பிற மாநிலங்களில் அழைக்கும்போது, அந்த மொழிகளை கற்றால் மட்டுமே பிழைக்க இயலும். இதனை நாம் சிந்திக்க வேண்டும்.

பிராந்திய மொழி முக்கியம்:

கியா பையா? என்று அவர் கேட்டால், அதற்கான அர்த்தம் உங்களுக்கு தெரிய வேண்டும். அவர்களிடம் என்ன அண்ணா? என கேட்டால் அவர்களுக்கு புரியுமா? சிந்திக்க வேண்டும். அங்கிருந்து வரும் இளைஞர்கள் உங்களிடம் பேசி புரியவில்லை என்றால் செவியிலேயே வைக்கமாட்டீர்கள். நமக்கு நமது மொழி முக்கியம் என்பதை போல, ஒவ்வொருவருக்கும் அவரின் மொழி முக்கியம்.

எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோங்க:

ஹிந்தி மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட பல மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகம் பெரியது. வானத்திற்கும், ஞானத்திற்கும் எல்லை இல்லை. நாம் அனைத்தையும் கற்றறிய வேண்டும். இதை நீ படிக்காதே என்றும் கூறக்கூடாது, இதைத்தான் நீ படிக்க வேண்டும் எனவும் கூறக்கூடாது. சென்னை, கோவை உட்பட பல இடங்களில் மழைக்காலங்களில் நீர் தேங்குவது தொடர்கதையாகியுள்ளது. இவ்வாறான போட்டோ சூட் ஆட்சியே இங்கு நடைபெறுகிறது" என பேசினார்.

பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த விஜய பிரபாகரனுக்கு தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு: