Dy CM Udhayanidhi Stalin Tiruvannamalai Visit 18-Oct-2024 (Photo Credit: @TNDIPR X)

அக்டோபர் 19, திருவண்ணாமலை (Tiruvannamalai News): தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ தலைமையில்‌ நேற்று (18.10.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்‌ திருக்கோவில்‌ (Arulmigu Arunachaleswarar Temple) திருக்கார்த்திகை தீபத்திருவிழாற்காக (Karthigai Deepam) பல்வேறு துறைகள்‌ மூலம்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ முன்னேற்பாடு பணிகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்:

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம்‌ பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin Tiruvannamalai Visit), "திருவண்ணாமலை (Tiruvannamalai Deepam Festival 2024) கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்‌ 1 முதல்‌ 17 ஆம்‌ தேதி வரை, கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. டிசம்பர்‌ 10 ஆம்‌ தேதியன்று, கார்த்திகைத்தேர்‌ ஊர்வலம்‌ நடைபெறவுள்ளது. அன்று சுமார்‌ 6 லட்சம்‌ பக்தர்கள்‌ கூடுவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, முக்கிய நிகழ்வான பரணி தீபம்‌ மற்றும்‌ மகா தீபத்திருவிழா, வருகின்ற டிசம்பர்‌ 13 ஆம்‌ தேதியன்று நடைபெறவுள்ளது. அன்று மட்டும் 40 - 50 லட்சம்‌ பக்தர்கள்‌ வருவார்கள்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. Aavin Green Magic Milk: ஆவின் பால் விலை அதிகரிப்பு? ஆவின் நிறுவனம் விளக்கம்.! 

மக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை:

இதனையொட்டி, டிச.13 அன்று பக்தர்கள்‌ கூடும் இடங்களில்‌ கள ஆய்வு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாநகரில்‌ பக்தர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ 30 கோடி ரூபாய்க்கும்‌ மேல்‌ பல்வேறு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள்‌ சிரமத்தை கருத்தில் கொண்டு குடிநீர்‌ வசதி, நடைபாதை வசதி, வடிகால்‌ வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்‌ போன்ற பணிகள்‌ தொடர்ந்து நடைபெற்றுள்ளன. மக்களின்‌ பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ அதிகமாக பொருத்தப்பட்டுள்ளன.

உணவுத்தரத்தை உறுதி செய்ய உணவுப்பாதுகாப்புத்துறை:

பொதுமக்கள்‌ அதிக எண்ணிக்கையில்‌ கூடுவார்கள்‌ என்பதற்காக முதலுதவி மையங்கள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று

வருகின்றன. நடமாடும்‌ கழிப்பறை வசதிகள்‌ உட்பட 400-க்கும்‌ மேற்பட்ட கழிப்பறை வசதிகள்‌ செய்து கொடுக்கப்படும்‌. கிரிவலப்பாதையில்‌ பலர்‌ அன்னதானம்‌ வழங்குவார்கள்‌. எனவே, உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ உணவின்‌ தரத்தை கண்காணிக்க அதிகாரிகள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. உள்ளாட்சி அமைப்புகளின்‌ சார்பில்‌ மின்‌ விளக்கு வசதிகள்‌, தற்காலிக பேருந்து நிலையங்கள்‌, போக்குவரத்துத்துறையின்‌ சார்பில்‌ பேருந்து சேவை போன்ற வசதிகள்‌ ஏற்படுத்தப்படும்‌.

பக்தர்களின் கருத்துக்களை பெறவும் நடவடிக்கை:

கோயிலுக்குள்‌ காத்திருப்பு மண்டபங்கள்‌, வளைவுகள்‌, அன்னதானக்‌ கூடங்கள் சமூக நலக்கூடங்கள்‌ கோயில்‌, குளத்தை தூர்வாரும்‌ பணிகள்‌ என ஏராளமான பணிகள்‌ விரைவில்‌ தொடங்கப்படும்‌. சில பணிகள்‌ தொடங்கிவிட்டன. வரும்‌ 6 மாதங்களுக்குள்‌ அனைத்து பணிகளும்‌ முடிக்கப்படும்‌. சிறப்புத்திட்டச்‌ செயலாக்கத்துறை சார்பாக ஒரு குழுவை இரண்டு நாட்களுக்கு முன்‌ அனுப்பி, பொதுமக்கள்‌, சமூக ஆர்வலர்களிடம்‌ திருவண்ணாமலையில்‌ தீபத்திருநாளின்‌ போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து கருத்துக்களைப்‌ பெற்றுள்ளோம்‌. அந்த கருத்துக்களின்‌ அடிப்படையிலும்‌ நடவடிக்கைகள்‌ எடுப்பது தொடர்பாக, இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது பல ஆலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டது.

கார்த்திகை தீபத்திருநாளில்‌ பக்தர்கள்‌ பாதுகாப்போடும்‌, மகிழ்ச்சியோடும்‌ திருவண்ணாமலைக்கு வந்து செல்லும்‌ வகையில்‌ அனைத்து நடவடிக்கைகளையும்‌ நம்முடைய அரசு எடுத்துள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே 8 ஆர்‌.ஓ பிளாண்ட்கள்‌ அமைக்கப்பட்டு பக்தர்கள்‌ பயன்படுத்தி வருகிறார்கள்‌. தற்போது புதிதாக 6 ஆர்‌.ஓ பிளாண்டுகள்‌ அமைக்கும்‌ பணிகளும்‌ துவங்கப்பட்டுள்ளன. விரைவில்‌ அவை செயல்பாட்டிற்கு வரும்‌" என தெரிவித்தார்.