IPL Auction 2025 Live

Erode Bypoll DMDK: "நாங்கதான் வெற்றி பெறுவோம்".. ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குறது தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.. சூடேறும் அரசியல்களம்..!

இதனால் ஈரோடு தேர்தல்களம் சூடேறியுள்ளது.

Erode East DMDK Candidate Anand - Premalatha VIjayakanth (Both File Photo) Picture Credit: Twitter

ஜனவரி 23: ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு (Erode East Constitution) சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் திருமகன் ஈவேரா (Thirumagan EVRa, MLA Congress Party) மாரடைப்பு காரணமாக கடந்து சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் (Election Commission ByPoll) அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் இரண்டாம் தேதி வெளியாகிறது.

காங்கிரஸ் திமுக கட்சியின் கூட்டணியில் இருப்பதால் மீண்டும் அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (EVKS Elangovan) தொகுதியின் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். Crocodile Carries Baby: உயிரிழந்த குழந்தையின் சடலத்தை முதுகில் சுமந்து வந்த முதலை.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.! 

அதிமுக சார்பில் (AIADMK) அதன் கூட்டணி கட்சிகளான பாஜக (BJP), தமாகா (TMC) ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் அதிமுக தலைமை சார்பாக ஓபிஎஸ் (O.PanneerSelvam-OPS) மற்றும் இபிஎஸ் (Edappadi Palanisamy-EPS) என இரு பிரிவுகளாக இருப்பதால், அவர்கள் இருவரும் தனித்தனியே கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இருந்த தேமுதிக, தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தனது வேட்பாளர் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை பகிர்ந்துள்ளது. Air India Express: விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்.!

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக மாவட்ட செயலாளராக இருக்கும் ஆனந்த் நடப்பு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா (Premalatha Vijayakant, State Secretary, DMDK Party) விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடையும். விஜய பிரபாகரன் சென்னையில் இருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதாக நாங்கள் ஏதும் கலந்து ஆலோசிக்கவில்லை. அது தொடர்பான தகவல் தவறானது.

இந்த மாவட்டத்தை சார்ந்தவரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கிழக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். மார்ச் இரண்டாம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் உங்களின் கேள்விக்கு பதில்கள் அனைத்தும் தெரியும்.

உட்கட்சித் தேர்தல் 90% நிறைவடைந்துவிட்டது. 10 விழுக்காடு பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை முதலில் எதிர்த்து கேட்பது தேமுதிக தான். அதேபோல மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை முதலில் வரவேற்பதும் தேமுதிக தான். மக்களுக்கு விரோதமான செயல்களை எதிர்ப்பதில் தேமுதிக யாருக்கும் பயப்படாது' என்று பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 08:31 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).