Girl Delivery Baby Rescued From Srivaikuntam: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது: தாய்-சேய் நலம்.!

தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

Women Mayil With Baby (Photo Credit: @ANI X)

டிசம்பர் 21, மதுரை (Madurai News): இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி (Thoothukudi), கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையானது கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பிரதான பகுதிகளிலும், கிராமங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வெள்ளத்தின் பாதிப்பு: அங்குள்ள 11 அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால், உபரி நீரும் அவசரகதியில் வெளியேற்றப்பட்டது. இதனால் பல இடங்களில் ஆற்றங்கரையோரம் ஊருக்குள் வெள்ளம் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய நகர்களுக்கான சாலைபோக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மீட்பு பணிகள் தீவிரம்: தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான நிலங்களில் இருந்த மக்கள், உயரமான இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இந்நிலையில், வெள்ளத்தின்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சார்ந்த அனுசியா மயில் என்ற கர்ப்பிணி பெண்மணி, வெள்ளத்தின் பிடியில் சிக்கியது தெரியவந்தது. Minor Girl Rape & Murder: 52 வயது நபரின் அதிர்ச்சி செயல்: 9 வயது சிறுமி பலாத்காரம், கொலை விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.! 

கர்ப்பிணிக்காக உதவிகேட்ட குடும்பம்: கர்ப்பிணி பெண் (Pregnant Women Rescued) மற்றும் அவரின் குடும்பத்தினரை காப்பாற்றக்கூறி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், விமானப்படை சார்பில் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

குழந்தை பிறந்தது: அங்கு மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும்-சேயும் நலமுடன் இருக்கின்றனர். விமானப்படை அதிகாரிகளின் துரித செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.