Sexual Harassment & Minor Abuse (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள புறநகர் பகுதி, ஸ்வரூப் நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கூலித் தொழிலாளர்களான தம்பதிக்கு 9 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டால், மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

பள்ளிமுடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி: அங்குள்ள பள்ளியில் சிறுமி படித்து வந்த நிலையில், மதியம் ஒரு மணிக்கு அவர் வீட்டிற்கு வந்து விடுவார். வீட்டிற்கு வந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் கவனித்துக்கொள்வார்கள். இந்நிலையில், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு சிறுமி தனது வீட்டிற்கு வழக்கம்போல வந்துவிட்ட நிலையில், மதியம் 2 மணியளவில் சிறுமி மாயமாகி இருக்கிறார்.

சிறுமி மாயம்: அக்கம் பக்கத்தினர் சிறுமியை கவனிக்காத சமயத்தில், சிறுமியின் வீட்டருகே வசித்து வரும் வீட்டின் உரிமையாளர், 9 வயது குழந்தையை (Delhi Minor Girl Rape and Killed) தன்னுடன் அழைத்துச் சென்றதாக தெரிய வருகிறது. இதன் பின் சிறுமி காணவில்லை. மாலை வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகளை தேடி அலைந்த நிலையில், அவரை காணாததால் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். Dunki Fans Celebration: விழாக்கோலம்பூண்ட வடமாநில திரையரங்குகள்: கொண்டாடும் ஷாருக்கான் ரசிகர்கள்..! 

மழுப்பிய வீட்டு உரிமையாளர்: அவர் தான் பானிபட் பகுதிக்கு வந்திருப்பதாகவும், வர தாமதமாகும் என்பதால் அப்பகுதியில் தேடி விட்டு, குழந்தை கிடைக்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இதனையடுத்து, மகளை அங்குள்ள அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து தேடிப்பார்த்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிர்ச்சி தகவல்: காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சிறுமியை 52 வயதுடைய வீட்டின் உரிமையாளர் தனது காரில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. அவர் எங்கே? என்று விசாரிக்கும் போது, விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது உறுதியானது.

Crime File Picture (Photo Credit: PIxabay)

உண்மை அம்பலம்: முதலில் அவரின் உடல்நலம் மோசமாக இருந்ததால், அதிகாரிகளால் வாக்குமூலத்தை பெற இயலவில்லை. 2 நாட்கள் காத்திருந்து வாக்குமூலம் சேகரித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு, உடல் அங்குள்ள கால்வாயில் வீசிப்பட்டது உறுதியானது.

உடலை தேடும் பணியில் அதிகாரிகள்: இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சிறுமியின் உடல் வீசப்பட்டதாக கூறப்பட்ட கால்வாயில், 15ஆம் தேதியிலிருந்து இன்று வரை அவரின் உடலை தேடி வருகின்றனர். ஆனால் சிறுமியுடன் தற்போது வரை மீட்க்கப்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியை இழந்த பெற்றோர் தெரிவிக்கையில், "மகள் மதியம் ஒரு மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். Earthquake Tips: நிலநடுக்கம் ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது., பாதிப்புகளை தவிர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?.. முழு விபரம் இதோ.! 

ஊரைச்சுற்றி காண்பிப்பதாக அழைத்துச்சென்று கொடூரம்: 2 மணியளவில் நிலத்தில் உரிமையாளர் காரில் ஊரை சுற்றி காண்பிப்பதாக சிறுமியை அழைத்துச் சென்று இருக்கிறார். அப்போதுதான் அந்த துயரமும் நடந்துள்ளது. அவருக்கு நாங்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. தான் வெளியூரில் இருப்பதாக கூறிவிட்டார்.

நம்பிக்கையை உடைத்த பரிதாபம்: எனது அம்மா எதுவாக இருந்தாலும் நிலத்தின் வீட்டின் உரிமையாளரிடம் கூறுங்கள், அவர் தேவையான உதவியை செய்வார் என்று கூறினார், ஆனால், அவரே இவ்வாறான செயலை செய்திருப்பார் என எண்ணிப்பார்க்கவில்லை. அவர் விபத்திற்குள்ளாவதற்கு முன்னதாக, டிசம்பர் 15ஆம் தேதி அவரது குடும்பத்தினரிடம் நடந்தது தொடர்பாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர் கண்ணீர்: அவர்கள் அவரை கடுமையாக தாக்கிய நிலையில், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றவர் விபத்தில் சிக்கி இருக்கிறார். எங்களது மகளின் சடலம் இன்று வரை மீட்கப்படவில்லை" என்று கண்ணீர் வடித்தனர்.