A Mason Suicide By Hanging: 33 வயதாகியும் திருமணமாகலயே – விரக்தியில் நேர்ந்த சோகம்..!

திருமணம் ஆகாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Suicide File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 09, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகேயுள்ள வண்டாவிளை பகுதியை சேர்ந்த ரெத்தினசாமி-ஜானகி. இத்தம்பதிகளுக்கு 2 மகள்களும், சதாசிவம் (வயது 33) என்ற மகனும் இருந்தனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. ரெத்தினசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு சதாசிவம் மற்றும் அவரது தாயார் ஜானகி இருவரும் வசித்து வந்தனர். Forest Fire In Valparai: 7 ஏக்கர் மதிப்புள்ள தேயிலை தோட்டம் எரிந்து சாம்பலானது – வால்பாறை வனப்பகுதியில் சோகம்..!

திருமணம் ஆகாத விரக்தி: இந்நிலையில், சதாசிவம் கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகாத நிலையில், அவர் மிகுந்த மன கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ஊர் மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement