
ஜூன் 07, களியக்காவிளை (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை, அஞ்சான்கோடு பகுதியில் வசித்து வருபவர் முரளி (வயது 35). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். முரளிக்கு மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது விடுமுறையில் சொந்த ஊர் வந்தவர், இன்று (சனிக்கிழமை) வெளிநாட்டுக்கு மீண்டும் செல்வதாக இருந்தார். மேக்கப் பொருட்களை சாப்பிட்டதால் விபரீதம்?.. 24 வயது இன்ஸ்டா பிரபலம் பரிதாப மரணம்.. ரசிகர்களுக்கு ஷாக்.!
சாலை விபத்தில் கண்ணீர் சோகம்:
பின் நேற்று இரவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்க வீட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றுள்ளார். பிரியாணி வாங்கியவர் மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, குழித்துறை சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட முரளி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை காவல்துறையினர், நேரில் வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டுக்கு செல்லவிருந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.