Forest fire (Photo credit: pixabay)

மார்ச் 09, வால்பாறை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. வனப்பகுதியில் மரங்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி காய்ந்து இருக்கிறது. Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!

திடீர் தீ விபத்து: இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள கருமலை பண்ணை பகுதியில் அக்காமலை பண்ணைக்குச் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து (Forest Fire) ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பண்ணை நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்: உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், 7 ஏக்கர் மதிப்புள்ள தேயிலை, மரங்கள், செடி என அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. மேலும், வால்பாறை சுற்றுவட்டாரா பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்து எளிதில் தீ பற்றிக்கொள்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.