Google Map Gone Wrong: வேலையை காண்பித்த கூகுள்; மேப்பை நம்பி படிக்கட்டு வழியே பயணம்..! ஊட்டியில் ஷாக் சம்பவம்.!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது அன்றாட செயல்பாடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது எனினும், வழியில் பாதை எப்படி உள்ளது? என்பதை கூட கவனிக்காமல் வாகன ஒட்டி செய்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஜனவரி 30, ஊட்டி (Nilgiris News): நெடுந்தூரப் பயணங்களுக்கு தற்போது உள்ள தொழில்நுட்பத்தில், கூகுள் மேப்ஸ் (Google Maps) பிரதானமாக உதவி செய்கிறது. கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி நமக்கு தெரியாத இடங்களில் உள்ள முகவரிக்கும் நாம் சென்று வரலாம். நமது பயண வழியில் உள்ள போக்குவரத்து நெரிசல், சுங்கச்சாவடி, தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் அதில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
கூகுள் மேப் குளறுபடி: இதனை பயன்படுத்தி அவசர காலங்களில் நமது பயணத்தை திட்டமிடவும் பெரிதும் உதவும். ஆனால் ஒரு சில நேரங்களில், விரைவான பாதை - குறுக்கு வழி என்ற பெயரில் கூகுள் மேப் செய்யும் குளறுபடி காரணமாக பல வாகனங்கள் எதிர்பாராத இடங்களில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்காவில் தொடங்கி இவ்வாறான பிரச்சனை இந்தியாவில் உள்ள பல கிராமங்கள் வரை நடந்துள்ளன. Neuralink Brain Implant Success: மனித மூளையில் சிப் பொருத்தி வெற்றியடைந்த நியூராலிங்க்; எலான் மஸ்க் அறிவிப்பு.!
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் கூகுள் மேப் உதவியுடன் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை நம்பி இரண்டு சாலைகளை படிக்கட்டு வழியே இணைத்த பாதைக்குள் வாகனத்தை இறக்கியுள்ளனர்.
அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்: ஒருகணம் விரைந்து சுதாரித்து வாகனத்தை நிறுத்தியவர்கள், பின் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பத்திரமாக வாகனத்தை கீழே இறக்கினர். கூகுள் மேப்பை நம்பி இவர்கள் தொடர்ந்து பயணித்து இருந்தால், விபத்து நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கலாம். கூகுள் மேப் இவ்வாறான குளறுபடிகளை செய்வது இது முதல் முறை இல்லை எனினும், அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் அதற்கு மேற்பட்டுள்ளது.
ஓட்டுநர்களே உஷாராக இருங்கள்: கூகுள் மேப் வழி காண்பித்தாலும், அதனை ஓட்டுநர் கவனித்துக்கொண்டே ஓட்டினார் போல படிக்கட்டு வழியே வாகனம் சாலையை கடந்துள்ளது. இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் பெரும் விபத்தையும் ஏற்படுத்தலாம்.