ஜனவரி 30, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எக்ஸ் கார்ப்பரேஷன் (X Corporation) நிறுவனத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகளில் முக்கியமானது நியூராலிங் (Neuralink).
முதல் மனிதரின் மீதான சோதனை வெற்றி: நியூராலிங்க் அமைப்பின் சார்பில் மனிதர்களின் மூளையில் ஸ்டார்ட்டர் சிப் பொருத்தி, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பரிசோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த பரிசோதனையின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும், முதல் மனிதர் நியூராலிக்கை பொருத்தி, அவர் நலமுடன் இருப்பதாகவும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். US Indian Student Died: அமெரிக்காவில் அடுத்த சோகம்.. இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர் மர்ம மரணம் உறுதி.!
மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் சிப்கள்: கடந்தாண்டு நியூராலிங்க் தொடர்பான சோதனைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து, இதற்கான சோதனைகள் தொடங்கி தற்போது முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூளையில் பொருத்தப்படும் சிப்கள், துல்லியமாக இயந்திர முறையில் மூளையை பயன்படுத்தி நமது செயல்பாடுகளை வெளிப்படுத்தும்.
இதற்கான படிப்படியான சோதனைகள் மற்றும் பிற அமைப்பு மேம்பாடு அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களும் தங்களது மூளையின் செயல்பாடுகளை தூண்டி தங்களுக்கு சாத்தியமான விஷயங்களை மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.