"சோம்பேறிகளாக மாறும் இளைஞர்கள்... விஷச்சாராய மரணத்துக்கு ரூ.10 இலட்சம் வழங்கியது தவறு" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்..!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது தீய முன் உதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஜூன் 24, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள்’ எனும் தலைப்பில் நீரதிகாரம் எனும் புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீரதிகாரம் நூல் எழுத்தாளர் அ.வெண்ணிலா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். Chicken Piece got Stuck in his Throat: போதையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் சோகம்; சிக்கன் பீஸ் மூச்சுக்குழாயில் சிக்கி பரிதாப பலி.!
இந்நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது, “வடக்கே சுதந்திர போராட்டம் தீவிரமடையும் முன்பே தமிழகத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியார் போன்றோர் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் இன்றைய நிலையில் தமிழகத்தில் நூறுநாள் வேலைத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் இளைஞர்கள் சோம்பேறியாக வைக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாதி சம்பளம் பெறும் இளைஞர்கள் அதை ஒரு கடையில் கொடுத்து உண்மையான ‘குடி’மகனாக மாறிவிடுகின்றனர். அதிலும் சிலர் மலிவு விலையில் அவை கிடைக்கின்றாதா என பார்க்கின்றனர். அப்படி தேடிபோன ஒரு கூட்டம்தான் கள்ளக்குறிச்சியில் மாண்டுள்ளனர். இதற்கு 10 லட்சம் கொடுத்து தீய முன்னுதாரணத்தை தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும்” என பேசினார்.