Brother Murder His Sister: தங்கையின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் கைது..!

திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் தனது தங்கையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder (Photo Credit: Pixabay)

மே 24, வாணாபுரம் (Thiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அடுத்த தொண்டமானூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 55). இவருக்கு துக்கச்சி (வயது 25), தமிழ்செல்வி (வயது 19) என இரண்டு மகள்களும், துக்கையன் (வயது 22) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மூத்த மகளான துக்கச்சி திருமணமாகி சென்றுவிட்டார். இதில், துக்கையன் மற்றும் தமிழ்செல்வி ஆகிய இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். China Military Exercises: தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்; சீனா தொடர்ந்து 2-வது நாளாக போர் ஒத்திகை..!

இந்நிலையில், நேற்று துக்கையன் அவரது தங்கை தமிழ்செல்வி ஆகிய இருவரும் வீட்டில் இருந்த நிலையில், திடீரென தனது தங்கையின் தலையில் துக்கையன் அம்மிக்கல்லை (Metate) தூக்கி போட்டுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதுதொடர்பாக, வாணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கையை கொலை செய்த துக்கையனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement