Youth Beaten By Councillor's Husband: ஏரியா தூய்மையாக இல்லை.. புகார் அளித்த இளைஞர்.. கடுப்பான கவுன்சிலர் குடும்பத்தினர் இளைஞர் மீது தாக்குதல்..!

கோவையில் ஏரியா தூய்மையாக இல்லை என புகார் அளித்த இளைஞர் மீது கவுன்சிலர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Youth Beaten (Photo Credit: @IeTamil X)

மே 31, கோயம்புத்தூர் (Coimbatore News): கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள ரயில்வே காலணி பகுதியில் கடந்த 5 மாதங்களாக தூய்மை பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர், அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கவிதாபுருஷோத்தமனிடம் (Congress councillor Kavitha) புகாரளித்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இது குறித்து இளைஞர் கவுதம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் புகாரளித்த நிலையில், தூய்மை பணிகளுக்காக துப்புறவு தொழிலாளிகள் வந்தனர். World No Tobacco Day 2024: "புகையிலை சுவைத்து மகிழ்ந்திடுவாய் - அது உன்னுயிர் சுவைப்பதை நீ அறியாய்..." உலக புகையிலை எதிர்ப்பு தினம்..!

இதனை அறிந்து கோபமடைந்த கவுன்சிலர் கவிதா அவரது கணவர் புருசோத்தமன் மற்றும் அவரது மகன் ஆகியோர் தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த துப்புரவு பணியாளர்களை இங்கு தூய்மை பணிகள் செய்யவேண்டாம் என்றதுடன் கவுதமை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்க்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.