Ocean Lifespaces India Raid: காலையிலேயே அதிரடி காட்டிய அமலாக்கத்துறை: சென்னையில் கட்டுமான தொழிலதிபர் வீடு & அலுவலகத்தில் திடீர் சோதனை.!

இருதரப்பு சண்டையில் உடைந்த பல தகவல்களை வைத்து அதிரடிகள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Ocean Lifespaces India (Photo Credit: Ocean.net.in / Facebook)

ஜனவரி 19, சென்னை (Chennai): சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனம் ஓசன் லைப்ஸ்பேஸ் இந்தியா (Ocean Lifespace India). இந்நிறுவனம் கட்டுமான பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான வேலைகளை செய்து தருகிறது. இந்நிலையில், இன்று காலை முதலாக அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.1000 கோடி வருமானம்: சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் பீட்டரின் வீட்டில் முதற்கட்டமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் ரூ.1000 கோடி வருமானம் ஈட்டியதாக கூறப்படும் நிலையில், முறைகேடுகள் செய்து வருமானம் ஈட்டியதாக புகார் எழுந்தது. இந்த புகாரியின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணபரிமாற்ற விரிவாகரத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. Jai Sriram Slogan Drawing: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்; 'ஜெய்ஸ்ரீராம்' மந்திரத்தில் கண்கவர் ஓவியம்.! 

அதிரடி சோதனை: அசோக் நகரில் உள்ள வீடு மற்றும் கிண்டியில் இருக்கும் நிறுவனத்தின் அலுவலகம் ஆகிய இடங்களில் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தின் நிறுவனர் உட்பட இரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த உயர் பொறுப்பாளர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருசில விஷயங்கள் தெரியவந்துள்ளதாகவும், அதன்பேரில் கிடைக்கப்பெற்ற தகவலை வைத்து அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது.

சோதனையின் முடிவில் பிற விபரங்கள் தெரியவரும்.