Lord Ram Drawing (Photo Credit: @Vinod_r108 X)

ஜனவரி 19, காசிபூர் (Ghazipur): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ஜனவரி 22ம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. பால ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் பலரும் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். இந்திய அளவில் முக்கிய அரசியல்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலருக்கும் நேரில் வர கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கும்பாவிஷேக பணிகள் தீவிரம்: ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியால் கோவில் கும்பாவிஷேக பணிகள் நடைபெறும் என்பதால், அங்கு உச்சகட்ட பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை & புறப்பாடு போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அயோத்தி சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தி இரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. Fire Accident: பூட்டிய வீட்டிற்குள் கரும்புகை.. 5 பேர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பதறவைக்கும் சோகம்.! 

குவியும் காணிக்கைகள்: அயோத்தி ராமர் கோவிலில் பரிசுகள் வழங்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருட்களை தங்களுடன் அயோத்தி எடுத்து செல்கின்றனர். இவை அனைத்தும் காணிக்கையாக அயோத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இன்றுள்ள தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒருசிலர் தங்களின் பக்தியுடன், தனித்திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கண்கவர் ஓவியம்: அந்த வகையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிபூர் பகுதியை சேர்ந்த பெண்மணி, ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்தை எழுதியவாறு ஸ்ரீ ராமர், சீதா தேவி, இலக்குவன், ஹனுமான் ஆகியோரின் உருவங்களை கொண்ட ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியம் அட்டகாசமாக இருக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ உங்களின் பார்வைக்காக: