Dindigul Shocker: ஆண் நண்பர்கள் முன் அக்கா - தங்கைக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல்லில் இளைஞர்களை கட்டிப்போட்டு பயங்கரம்.!
கோவில் திருவிழாவுக்கு சென்று வந்த ஜோடிகளை மறித்து மிரட்டி தங்களுடன் அழைத்துச்சென்ற கும்பல், அக்கா - தங்கையை அவர்களின் ஆண் நண்பர்கள் முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
ஏப்ரல் 06, சாணார்பட்டி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 19, 17 மற்றும் 13 வயதுடைய 3 மகள் இருக்கின்றனர். இவர்களில் 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகளுக்கு, அப்பகுதியில் வசித்து வரும் இரண்டு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் தங்களின் ஆண் நண்பர்களுடன் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி இடையகோட்டை பகுதியில் உள்ள கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றனர்.
தனியே இருப்பதாக எண்ணி சிறுமிகளை கவனித்த கும்பல்: பின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டு விட்டு நின்றுள்ளனர். அச்சமயம் இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சியநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த சரண்குமார் (வயது 21), முத்தழகுபட்டியைச் சார்ந்த வினோத்குமார் (வயது 26), முருகாபவனம் பகுதியைச் சார்ந்த சூரிய பிரகாஷ் (வயது 22) ஆகியோர், சிறுமிகளை (Sisters Sexually Harassed Infront of Boy Friends) கவனித்துள்ளனர். மேலும், இங்கு யாருடன் வந்தீர்கள்? என்று கேட்க, ஹோட்டல் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்து விட்டு அவர்களது ஆண் நண்பர்களும் வந்துள்ளனர். SRH Vs CSK Highlights: சென்னை அணியை பந்துவீச்சில் மிரட்டித்தள்ளிய ஹைதராபாத்; திணறிய சிங்கங்களை வீழ்த்திய சன் ரைஸஸ்.!
கை-கால்களை கட்டிப்போட்டு நண்பர்கள் கண்முன் கொடுமை: பின்னர் ஆண் நண்பர்கள் இருவரையும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏற்றிய நபர்கள், சிறுமிகளை தங்களுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அனைவரும் திண்டுக்கல் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பகுதியில் ஆண் நண்பர்களின் கை-கால்களை கட்டிபோட்டவர்கள், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் மேற்கூறிய மூன்று பேர் கும்பலுடன், அவரது நண்பர் பிரசன்னகுமாரும் இணைந்திருக்கிறார்.
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு & கைது: இந்த விஷயம் தொடர்பாக சாணர்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல்துறையினர், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குபின் சரண்குமார், வினோத்குமார் சூரியகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான பிரசன்னகுமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்களில் பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது, அங்குள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது கைதான மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.